சினிமா
பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி… பரபர அப்டேட்….

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. எப்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் இவர்தான். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். அதேபோல், தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர், ரசிகைகள் கூட்டமும் உண்டு. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் நடித்தார். அதன்பின் ‘உப்பென்னா’ படத்திலும் அசத்தல் வில்லனாக கலக்கியிருந்தார். தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தை கோபிசந்த் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை பிடித்திருந்தால் விஜய் சேதுபதி அதில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


















