சினிமா செய்திகள்
வெளியானது ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

‘தல’ அஜித் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’.
இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அல்லது அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் ஓய்ந்தே விட்டார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.
The wait is over. Here you go #ValimaiMotionPosterhttps://t.co/CxOLiJpo17#Valimai #ValimaiFirstlook#Ajithkumar #HVinoth @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi @ActorKartikeya @RajAyyappamv @bani_j @iYogiBabu @editorvijay
— Boney Kapoor (@BoneyKapoor) July 11, 2021
யுவன் சங்கர் ராஜாவின் தெறிக்கவிடும் இசையில் வெளி வந்துள்ள இந்த மோஷன் போஸ்டர், ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடியிருக்கின்றன.
எப்போது திரையரங்குகள் திறக்கப்படுகின்றனவோ, அப்போது தியேட்டரில் ‘வலிமை’ திரைப்படத்தை வெளியிட படக்குழு உறுதியாக உள்ளதாம். அதுவரை போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளை படக்குழு செய்யுமாம்.