ஆரோக்கியம்
இவை 300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக் கூடியவை!
Published
2 months agoon
By
seithichurul
பிரண்டை:
பிரண்டை மருத்துவக் குணமுடையது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது.
சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை… எனப் பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.
வஜ்ர வல்லி பற்றித் தெரியுமா?
பிரண்டையின் தண்டு மற்றும் இலையைப் பயன்படுத்தும் போது நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கிப் பயன்படுத்த வேண்டும். பிரண்டை அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைப்பதோடு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.
இரைப்பையில் ஏற்படும் அலர்ஜி, அஜீரணம், பசியின்மை, குடற்புழு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளுக்குப் பிரண்டையின் தண்டு சிறந்த மருந்தாக உள்ளது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்குப் பிரண்டை சிறந்த மருந்தாகப் பயன்படும்.
300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. நமது உடல் வஜ்ரம் போல் பாதுகாப்பதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு.
உடல் சுறுசுறுப்பு, மூளை நரம்புகள் ஆரோக்கியத்திற்கு…
இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளைப் பலப்படுத்தும்; எலும்புகளுக்குச் சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.
பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்ந்து துவையலாக அரைத்துச் சாப்பிடலாம். இதனைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்.
மூளை நரம்புகள் பலப்படும். குடலில் உள்ள வாயுவை அகற்றி வெளியேற்றும். குழந்தைகளுக்குப் பிரண்டையைச் சாப்பிடக் கொடுத்த வந்தால் எலும்புகள் பலப்படும்.