சினிமா செய்திகள்
‘தளபதி 65’ அப்டேட்: இன்று மாலை 5 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ’தளபதி 65’ படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 65 டைட்டிலை சுற்றி துப்பாக்கிகளுடன் கூடிய இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதனை அடுத்து மாலை 5 மணியை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
#Thalapathy65 update today 5 PM! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures pic.twitter.com/ZdW8BKkERD
— Sun Pictures (@sunpictures) March 24, 2021


















