சினிமா செய்திகள்
தளபதி விஜய்யின் அடுத்த பட நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என கடந்த ஒரு மணி நேரத்துக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது என்று வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்பதுதான் அந்த அதிரடியான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பூஜா ஹெக்டே உறுதி செய்யப்பட்டுள்ளார். இவர் முதன்முதலாக விஜய் யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முகமூடி உள்பட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பூஜா ஹெக்டே தெலுங்கில் தற்போது நம்பர்-1 நாயகியாக உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழிலும் மிக அதிக வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures) March 24, 2021


















