சினிமா செய்திகள்
நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று: தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்து அவருடன் நடித்த நடிகை ஒருவரும் கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமீர்கான் தற்போது நிதிஷ் திவாரி என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக கைரா அத்வானி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கைரா அத்வானிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமீர்கான் தற்போது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.




















