சினிமா செய்திகள்
முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அதாவது ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய்க்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் அந்த லுக் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக படக்குழுவினர் அனைவரும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா போட்டியில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து பூஜா ஹெக்டே தான் கிட்டத்தட்ட இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

















