சினிமா செய்திகள்
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா: அதிர்ச்சியில் ‘தளபதி 65’ படக்குழுவினர்

பிரபல தெலுங்கு நடிகையும் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று படக்குழுவினர் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
???????????? pic.twitter.com/fwdd9Cq1Go
— Pooja Hegde (@hegdepooja) April 25, 2021
நேற்று தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதையடுத்து தான் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து இந்த பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

















