சினிமா செய்திகள்
’தளபதி 65’ வில்லன் செல்வராகவனா? பரபரப்பாக பரவும் தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குனர் செல்வராகவன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டால் செல்வராகவன் இந்த படத்தின் வில்லன் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக நடிக்க பாலிவுட் பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் ஏற்கனவே தமிழில் ’சாணி காகிதம்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தளபதி 65 திரைப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.









