சினிமா செய்திகள்
ஓட்டு போட்ட ஒருசில மணி நேரத்தில் வெளிநாட்டுக்கு பறந்த விஜய்: ஏன் தெரியுமா?

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஓட்டு போட்ட ஒரு சில மணி நேரத்தில் விஜய் சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் அவரை புகைப்படம் எடுத்த சிலர் தங்களது டுவிட்டரில் பதிவு செய்ததை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் அவர் ஜார்ஜியாவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தற்போது அவரது தளபதி 65 படப்பிடிப்பிற்காக சென்று உள்ளதாக தெரிகிறது. மேலும் இயக்குனர் நெல்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.








