ga('set', 'anonymizeIp', 1);

Categories: சினிமா செய்திகள்

கிராபிக்ஸ் வீடியோவில் தல தோனி: வேற லெவலில் வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் வீரர் தல தோனி கிராபிக்ஸ் வீடியோ ஒன்றில் நடித்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி, அமேசான் தளத்தில் ஒளிபரப்பாக உள்ள கிராபிக் நாவல் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த நாவலில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் வீடியோவும் வெளியாகிவிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ‘அதர்வா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த கிராபிக்ஸ் நாவல் விரைவில் அமேசான் இணையதளத்தில் வெளியாக இருப்பதாகவும் இந்த கிராபிக்ஸ் வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோனியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த கிராபிக்ஸ் நாவலின் டீசர் வீடியோ குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது. அமேசானில் வெளிவந்தவுடன் இந்த கிராபிக் நாவல் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Shiva