Connect with us

கிரிக்கெட்

எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: தோனி உருக்கமான பேச்சு!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டிக்கு பிறகு, சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் உருக்கமாக பேசியிருப்பது, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தோனி உருக்கமான பேச்சு

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசுகையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் தான் நான் இருக்கிறேன். இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே எனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. இன்று இங்கு விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் அனைவரும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து இருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகும் இப்போது கூட நான் பேசுவதை கேட்பதற்காக நீண்ட நேரம் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் தடைசி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வேண்டும் என ஏற்கனவே தோனி கூறி இருக்கிறார். இந்நிலையில், நேற்று தோனி பேசியது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தோனியை பார்ப்பதற்காகவே சென்னையில் ரசிகர்கள் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி முடிந்த பிறகு தோனியின் ரசிகர் ஒருவர், உங்களுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என ஒரு பெரிய பதாகையில் எழுதி மைதானத்தில் இருந்து காண்பித்தார்.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?