சினிமா
மூக்குத்தி அம்மன் நயன்தாரா வந்த நேரம்.. மும்பை அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

எந்த வருடமும் இல்லாமல் திடீரென இந்த முறை ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போது பல பிரபல நடிகர்கள் கலந்து கொண்டு வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஒ. பன்னீர் செல்வன், தமிழிசை செளந்தரராஜன் என அரசியல் பிரபலங்களும் அடிக்கடி அணிவகுத்து வருகின்றனர்.

#image_title
மனோபாலாவின் மரணத்திற்கு வராத தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் கூட இன்று நடந்த சென்னை ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் மும்பையை அணி தான் பல ஆண்டுகளாக வெற்றிப் பெற்று வந்த நிலையில், மூக்குத்தி அம்மன் நயன்தாரா வந்த நேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல ஆண்டுகள் கழித்து மும்பை அணியை சென்னையில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#image_title
இன்று நடந்த சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை சேப்பாக்கம் மைதானத்துக்கு நேரில் வந்து நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.
அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், #Nayanthara ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.