சினிமா
ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

அனிருத் உடன் செல்லம்மா செல்லம்மா, பிரைவேட் பார்ட்டி உள்ளிட்ட பல ஹிட் சாங்குகளை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி ஐபிஎல் இறுதிப்போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பாடப் போவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் பாடலை பாடி இந்தி திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் தான் ஜோனிடா காந்தி.

#image_title
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏகப்பட்ட இந்தி படங்களுக்கு பாடல்களை பாடி வந்த ஜோனிடா காந்தி தமிழிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மென்டல் மனதில் பாடல் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
அனிருத் இசையில் கோலமாவு கோகிலா படத்தின் கண்ணே கண்ணே பாடலை பாடிய ஜோனிதா காந்தி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சர்க்கார் படத்தில் இடம்பெற்ற ஒஎம்ஜி பொண்ணு பாடலையும் பாடினார்.

#image_title
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்காக அனிருத் உடன் இணைந்து ஆட்டம் போட்டப்படி வெளியான செல்லம்மா செல்லம்மா லிரிக் வீடியோவில் தான் ஓ இவர் தான் ஜோனிடா காந்தியா என ரசிகர்கள் வாய் பிளந்தனர்.
அதன் பின்னர், பல பாடல்களை பாடி வரும் ஜோனிடா காந்தி இந்தியா முழுக்க தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாக நடைபெற உள்ள நிறைவு விழாவில் ஜோனிடா காந்தி பாடி அசத்தப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவருடன் சேர்ந்து மேலும், சில ராப் பாடகர்கள் பாடல்களை பாட உள்ளனர்.