சினிமா செய்திகள்
சிம்பு பிறந்த நாளில் டபுள் ட்ரீட்: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.
சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பிறந்தநாள் பரிசாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டதை அடுத்து சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்த வீடியோவில் சிம்புவின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்பதும் இதை பார்த்தவுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள அட்டகாசமான இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரசிகர்கள் சிம்புவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.