உலகம்
தொடர்கதையாகும் வேலைநீக்க நடவடிக்கை.. 2000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம்!

2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து வேலைநீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் தான் தினந்தோறும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ள நிலையில் உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட 90% ஊழியர்களுக்கு இன்னும் புதிய வேலை கிடைக்கவில்லை என்றும் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் ஊழியர்கள் தற்போது வேலையில்லாமல் கடும் பிரச்சனைகள் சிக்கி இருப்பதாகவும் அவர்களுடைய சமூக வலைதள பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு முன்னணி நிறுவனம் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ளது டெஸ்கோ என்ற நிறுவனம்.

#image_title
பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடி நிறுவனமான டெஸ்கோ தனது பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
டெஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் டெஸ்கோ நிறுவனத்தின் உணவு கவுண்டர்களையும் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது 16 ஆயிரம் ஊழியர்களை புதியதாகவேலைக்கு டெஸ்கே தற்போது திடீரென 2000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.