ஆன்மீகம்
ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆடி மாதம் நிறைவடைந்து, ஆவணி மாதம் தொடங்க உள்ளது. தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரலட்சுமி விரதம், ஓணம், ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பண்டிகைகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.
இதுதவிர, ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு விரத நாட்களும் ஆவணி மாதத்தில் வருகின்றன.
ஆவணி மாத முக்கிய விசேஷ நாட்கள்
- ஆகஸ்ட் 21 (ஆவணி 4) – வரலட்சுமி விரதம்
- ஆகஸ்ட் 26 (ஆவணி 9) – ஓணம் பண்டிகை, மிலாடி நபி
- ஆகஸ்ட் 27 (ஆவணி 10) – ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 28 (ஆவணி 11) – காயத்ரி ஜபம்
- ஆகஸ்ட் 31 (ஆவணி 14) – மகா சங்கடஹர சதுர்த்தி
- செப்டம்பர் 4 (ஆவணி 18) – கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 14 (ஆவணி 28) – விநாயகர் சதுர்த்தி
ஆவணி மாத விரத நாட்கள்
ஆவணி மாதத்தில் பல்வேறு முக்கிய விரத நாட்களும் வருகின்றன. ஆகஸ்ட் 27 பௌர்ணமியும், செப்டம்பர் 10 அமாவாசையும் வருகிறது. மேலும் செப்டம்பர் 3 கிருத்திகை, ஆகஸ்ட் 26 திருவோணம் ஆகிய நாட்களும் அனுசரிக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 23 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் ஏகாதசி விரதமும், ஆகஸ்ட் 18 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் சஷ்டி விரதமும் வருகிறது.
மேலும், ஆகஸ்ட் 31 சங்கடஹர சதுர்த்தி, செப்டம்பர் 9 சிவராத்திரி, ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர் 8 பிரதோஷம், செப்டம்பர் 14 சதுர்த்தி ஆகிய நாட்களும் முக்கியமான விரத தினங்களாக உள்ளன.
அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்
ஆவணி மாதத்தில் ஆகஸ்ட் 20 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் அஷ்டமியும், ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் நவமியும் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 19, ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 14 ஆகிய தேதிகள் கரி நாட்களாக குறிப்பிடப்படுகின்றன. இந்த நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது வழக்கம் என கூறப்படுகிறது.









