உலகம்
ஆசைக்கு இணங்காததால் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.. கூகுள் பெண் அதிகாரி மீது ஆண் அதிகாரி குற்றச்சாட்டு!

பெண் மேல் அதிகாரியின் ஆசைக்கு இணங்காததால் நான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என ஆன கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்கள் ஆக கூகுள் நிறுவனம் உள்பட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஆண் அதிகாரி ஒருவர் தனது பெண் மேல் அதிகாரி தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அவரது ஆசைக்கு இணங்காததால் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம் சாட்டிய நபரின் பெயர் ரையான் ஒலோஹான். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விருந்து நிகழ்ச்சியில் தனது பெண் மேலதிகாரி டிபானி மில்லர் என்பவர் உடன் கலந்து கொண்டதாகவும் அப்போது தனது பெண் மேலதிகாரி பாலியல் உணர்வை தூண்டும் வகையில் தன்னை பல இடங்களில் தொட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்கு ஆசிய பெண்களை பிடிக்கும் என்று எனக்கு தெரியும் என்றும் நானும் ஆசிய பெண் தான் என்றும் அவர் பாலியல் உணர்வுடன் கூறியதாகவும் ஆனால் அவர் மீது எனக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தான் புகார் செய்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தற்போது வேலை நீக்க பணியாளர் லிஸ்ட் எடுக்கும் போது தன்னுடைய பெயரையும் அந்த பெண் மேலதிகாரி சேர்த்துள்ளதாகவும் இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் இது குறித்து அந்த பெண் மேலதிகாரி கூறிய போது இது முழுக்க முழுக்க கற்பனை சார்ந்த ஒரு குற்றச்சாட்டு என்றும் இந்த குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையையும் இல்லை என்றும் கூறியுள்ளார். பெண் மேலதிகாரியின் ஆசைக்கு இணங்காததால் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என ஆண் அதிகாரி ஒருவர் கூறி இருப்பது கூகுள் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.