உலகம்
குழந்தை பிறந்த 3 நாளில் வேலையிழந்த கூகுள் ஊழியர்.. அதிகாலை 2 மணிக்கு வந்த மெயில்..!

தனக்கு பெண் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதிகாலை இரண்டு மணிக்கு வேலைநீக்கம் குறித்த மெயில் வந்ததாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் லிங்க்டின் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்கள் அந்த செய்தியை எப்படி அறிந்து கொண்டோம் என்பதை லிங்க்டின் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் கலந்து சில ஆண்டுகளாக வேலை செய்து வந்த டுஃபாவ்என்ற ஊழியர் தனக்கு குழந்தை பிறந்த 3 நாட்களில் தனக்கு பணி நீக்கம் குறித்த மின்னஞ்சல் வந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு செல்ல மகள் பிறந்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென குழந்தை அழுதது என்றும் இதனை அடுத்து குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கும்போது தானியங்கி மின்னஞ்சல் தனக்கு வந்ததை பார்த்து அதை ஓபன் செய்தபோது அதில் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

google layoff
அதிகாலை இரண்டு மணிக்கு என் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கும் போதே வந்த மின்னஞ்சலை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் கூகுள் நிறுவனம் தன்னை பற்றியும் தனது வேலை பற்றியும் உயர்வாக பேசியது என்றும் அதன் பின் ஆறே மாதத்தில் தன்னை வேலையை விட்டு நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்துடன், எனது புதிய மகளுடனும் பொன்னான நேரத்தை செலவழிப்பதற்காக கூகுள் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்திருப்பதாகவே இந்த வேலை நீக்க நடவடிக்கை நான் கருதுகிறேன் என்றும் கண்டிப்பாக எனக்கு இன்னொரு புதிய வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பணி நீக்கமும் ஒவ்வொரு ஊழியர்களுக்கு ஒரு கடினமான அனுபவம் என்றும் என்னைப் போன்ற அப்பாவிகள் இதனை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.