வணிகம்
LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான ஆதார் அடிப்படையிலான e-KYC செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
முன்னதாக, LPG வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC-ஐ முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. e-KYC செய்யாதவர்களுக்கு சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ.300 மானியத்தை பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம். இதனால், சிலிண்டரை மானியமின்றி சந்தை விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
இந்நிலையில், e-KYC செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, LPG வாடிக்கையாளர்கள் இந்த காலக்கெடுவுக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
LPG e-KYC செய்வது எப்படி?
e-KYC-ஐ ஆன்லைனில் எளிதாக முடிக்கலாம். முதலில், நீங்கள் பயன்படுத்தும் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் Aadhaar Face RD செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் LPG செயலியில் e-KYC என்ற option-ஐ தேர்வு செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் அடையாளத்தை சரிபார்த்த பிறகு e-KYC செயல்முறையை நிறைவு செய்யலாம்.
ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள், தங்களது அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று e-KYC-ஐ நிறைவு செய்து கொள்ளலாம்.









