Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

Published

on

  1. ஆவின் பால் கொள்முதல் விலை ரூ. 3 உயர்வு. ரூ.38லிருந்து ரூ.41 ஆக உயர்வு.
  2. டெல்லியில் மாணவர் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முன்னாள் சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்ததோடு இக்குழு  விரைந்து இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
  3. தொகுதி மறுவரையறையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என அமித்ஷா தலைமையில் நடந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் பேச்சு.
  4. மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் இராணுவத்தை அனுப்புவோம் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.
  5. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 614 பேர் மருத்துவ படிப்பில் சேர்க்கை! ‘மருத்துவ கல்லூரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 614 மாணவ மாணவியருக்கு, எம்.பி.பி. எஸ்., – பி.டி.எஸ்., படிக்க இடங்கள் கிடைத்துள்ளன’ என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  6. ரேஷன் கார்டை எடுத்துச் சென்றுதான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ரேஷன் கார்டு Soft Copy  அல்லது ரேஷன் கார்டு நம்பர் இருந்தால் போதும் ரேஷன் கார்டு நம்பரை சொல்லி கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். – சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சர்  வெங்கடரமணன் விளக்கம்.
  7. எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 5வது முறை முதல் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்கள் ரூ.15 + ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். – அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்.
  8. தமிழ்நாட்டுக்காகவே மேகதாது அணை. கர்நாடகாவுக்காக அல்ல. பெங்களுரு நகரின் குடிநீருக்கான 5 டிஎம்சி தண்ணீரை தவிர மற்றவை தமிழ்நாட்டுக்குத்தான் – தென்மாநில முதல்வர்கள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி.
  9. இன்றைய தங்கம் விலை – கிராம் ஒன்றுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.14710க்கும் சவரன் ரூ.117680க்கும் விற்பனை ஆகிறது.
  10. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
  11. தமிழ்நாடு கடன்சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கார் வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம் – எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி.
  12. FIFA  மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் 2027ம் ஆண்டு ஜீன் 24 ம் தேதி பிரேசிலில் தொடங்கும் என அறிவிப்பு.
  13. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களையும் கொண்டு வரத் திட்டம். இதற்காக மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா13 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்14 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா14 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
網絡工程 網絡設備 ip.