சினிமா செய்திகள்
புது கார் வாங்கிய ‘மாஸ்டர்’ பவானி- அபிமான இயக்குநரிடமிருந்து சாவியைப் பெற்றார்
தளபதி ‘விஜய்’ நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் ‘மாஸ்டர்’. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. கொரோனாவால் துவண்டு கிடந்த தமிழ்த் திரைத் துறையை தட்டி எழுப்பி நிமிர வைத்தது மாஸ்டர் ரிலீஸ் தான்.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, ‘பவானி’ என்னும் கேரக்டரில் அசத்தி இருப்பார். தனது அசால்டான நடிப்பு மூலம் விஜய்க்கு சமமான பெயரை விஜய் சேதுபதி இந்தப் படம் மூலம் பெற்றிருப்பார். மாஸ்டர் ரிலீஸுக்குப் பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க பாலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் இருந்து விஜய் சேதுபதிக்குத் தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன.
New year, New life , New journey , everything started from my one and only MASTER ????
Love you @Dir_Lokesh na ❤️
Thank you @NexaExperience @Maruti_Corp for ur good service and hospitality ???? Loved the work you people do ???????? pic.twitter.com/N5uVJbB9eZ
— Master Mahendran ???? (@Actor_Mahendran) April 8, 2021
விஜய் சேதுபதியின் சின்ன வயது கேரக்டரை ‘மாஸ்டர்’ மகேந்திரன் ஏற்று நடித்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் சுமார் 10 நிமிடங்களே இந்த கதாப்பாத்திரம் வந்தாலும், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ரோலாக அது மாறியது. மாஸ்டர் படம் வந்தது முதல் மகேந்திரனை அவரது ரசிகர்கள், ‘குட்டி பவானி’ என்று தான் அழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காருக்கான சாவியை ‘மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து பெற்று மகிழ்ந்துள்ளார்.