சினிமா செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்டார் ரஜினியின் ரீல் மகள்: குவியும் வாழ்த்துக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய ’தர்பார்’ திரை படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவரது நடிப்புக்கு நல்ல பாசிடிவ் விமர்சனம் கிடைத்தது என்பதும் இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழ் தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்களின் அறிவுரையைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளேன் என்றும் இந்த நற்செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சூரிய ஒளி முகத்தில் சுள்ளென அடிக்கும் வகையில் படுக்கை அறையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் இப்போதுதான் புதிதாக பிறந்தது போல் இருக்கிறேன் என்று புன்சிரிப்புடன் கூறியுள்ளார். மேலும் நான் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அத்தனை ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிவேதா தாமஸ் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான வக்கீல் சாகிப் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















