சினிமா செய்திகள்
எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை: ராதிகா தகவல்

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தனக்கு பாதிப்பு இல்லை என்றும் தான் வேலையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறும்போது என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் ஆனால் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்ட உடன் உடல் வலி மட்டுமே இருந்ததாகவும் அதற்கு மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் தற்போது நீதிமன்றத்தில் போராடி வருகின்றோம் என்றும் அதனை அடுத்து மீண்டும் நான் வேலைக்கு திரும்பியுள்ளேன் என்றும் இன்று எனக்கு மீண்டும் ஒரு நல்ல நாள் என்று ராதிகா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராதிகாவுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
முன்னதாக ராதிகா மற்றும் சரத்குமார் மீது செக் மோசடி வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் மேல்முறையீடு காரணமாக அந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.
Thanks everyone for the love and affection, I am not down with corona virus, just body ache after second vaccine. On line press are just filing rubbish about health and case.We will fight it in higher courts. I am back at work, have a good day ❤️❤️❤️
— Radikaa Sarathkumar (@realradikaa) April 9, 2021

















