சினிமா
இன்னும் 60 நாள் ஷூட்டிங் இருக்கு.. லியோ அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சார்பாக சனிக்கிழமை இரவு பிரம்மாண்டமான விருது விழா நிகழ்ச்சி சென்னையை அடுத்த பூந்தமல்லி இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா, சிம்பு, இயக்குநர் மணிரத்னம், பிரதீப் ரங்கநாதன், ரிஷப் ஷெட்டி, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடைசியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நள்ளிரவு நேரத்தில் விழா மேடைக்கு வந்த போது அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் லியோ என்றும் தளபதி விஜய் என்றும் கத்தி கூச்சலிட்டனர். அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நானும் த்ரிஷாவும் லியோ படம் குறித்த எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாது என பேசி வைத்து விட்டு வந்திருக்கோம். நீங்க அவங்க கிட்டேயும் எதுவும் கேட்காதீங்க என எச்சரிக்கை போர்டு மாட்டினார்.
ஆனால், கடையில் தொகுப்பாளர் சாதுர்யமாக மடக்க ஒரு சூப்பரான அப்டேட்டை கொடுத்து விட்டார். லியோ திரைப்படம் சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இதுவரை 60 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதம் இன்னமும் 60 நாள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் சொன்ன தேதியில் படம் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையில் பேச ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
















