சினிமா
சரக்கு பார்ட்டி போட்டோ வெளியிடாதீங்கனு கண்டிஷன் போட்ட விஜய்; ஃப்ரெஷ்ஷான போட்டோ வர அதுதான் காரணமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று நள்ளிரவே லியோ படக்குழுவினர் ஸ்பெஷல் சரக்கு பார்ட்டியே கொண்டாடி உள்ளனர்.
நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் இரவு பார்ட்டி போட்டோக்களை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் மட்டும் பகலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் பட்சத்தில் இரவு பார்ட்டி போட்டோவை வெளியிட வேண்டாம் என விஜய் கண்டிஷன் போட்டு இருப்பார் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

#image_title
ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் பர்த்டே பார்ட்டியில் சரக்கு அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தான் இதுவரை அவருடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்களும் இண்டஸ்ட்ரியில் அடிபட்டு வருகிறது.

#image_title
அந்த விஷயத்தில் லோகேஷ் கனகராஜ் தெளிவாக சஞ்சய் தத் மற்றும் நடிகை த்ரிஷா உடன் இரவு நேர பார்ட்டியின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்களையும், நடிகர் விஜய் உடன் காலையில் காஷ்மீர் பனி சூழ எடுத்துக் கொண்ட ஸ்டில்லையும் வெளியிட்டு ரசிகர்களையும் தளபதி விஜய்யையும் குஷிப்படுத்தி உள்ளார்.