சினிமா
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: ‘லியோ’ படக்குழு அப்டேட் தருமா?

லோகேஷ் கனகரஜ் பிறந்தநாளன்று ‘லியோ’ படக்குழு அப்டேட் தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் என இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘லியோ’. இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் பரபரப்பாக நடந்து வருகிறது. மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனனுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்த ஷெட்யூலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருக்கிறார்.

Leo
இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் என்பதால் கோட்லிவுட்டில் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகர் சஞ்சய் தத், லோகேஷூடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, ’என் சகோதரரும் மகனும் என் குடும்பத்தில் ஒருவருமான லோகேஷ் கனகராஜுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
அதிக வெற்றியோடும் அமைதியோடும் சந்தோஷத்தோடு செல்வத்தோடும் கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நான் எப்போதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். எனது அன்பு!’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், த்ரிஷா உள்ளிட்டப் பலரும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து லோகேஷூடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை ஒட்டி ‘லியோ’ படத்தின் அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.