சினிமா செய்திகள்
வேர்வை சொட்ட சொட்ட வொர்க் அவுட் செய்யும் சிம்பு; வைரல் வீடியோ!

உடல் எடையைக் குறைத்ததில் இருந்து நடிகர் சிம்பு, வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் தன் உடல் எடையைக் குறைக்க சிம்பு முடிவு செய்தார். அதன்படி பல மாதப் பயிற்சிக்குப் பின்னர் ஃபிட்டாக மாறினார். தொடர்ந்து ‘ஈஸ்வரன்’ படத்தில் மின்னல் வேகத்தில் நடித்துக் கொடுத்தார். அந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகி சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Thalaivan @SilambarasanTR_
Gym time! #SilambarasanTR #Simbu #Atman pic.twitter.com/SJdaSeSmEo— SILAMBARASAN TR FANS CLUB (@ThalaivanSTR_FC) March 7, 2021
தற்போது சிம்பு, வெங்கட் பிரவு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் படுபிஸியாக இருக்கிறார். தொடர்ந்து ‘நதிகளிலே நீராஉம் சூரியன்’ மற்றும் ‘பத்து தல’ படங்களில் நடிக்கிறார் சிம்பு. இந்நிலையில் ஜிம்மில் டிரெய்னருடன் சிம்பு ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மிகவும் கடினமாக ஒர்க் அவுட் செய்த சிம்புவை லவ்லி என கூறி ட்ரைனர் பாராட்ட அதற்கு சிம்பு, உனக்கு லவ்லி மேன் எங்களுக்கு லவ்லி இல்லையே என வலியில் துடிக்கிறார்.











