இந்தியா
ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து மேலும் ஒரு சமூக வலைத்தளத்தில் வேலைநீக்கம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்!

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் சமீபத்தில் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை எடுத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் சமூக வலைதளங்களில் ஒன்றான ஷேர்சாட் தற்போது 5 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே jeet 11 என்ற செயலியை நிறுத்திய ஷேர்சாட் நிறுவனம் தற்போது ஷேர் சாட் நிறுவனத்தில் சில மறுசீரமைப்பு பணிகளை செய்து உள்ளது. இதன் காரணமாக செலவை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கை உள்பட ஒருசில நடவடிக்கை எடுத்துள்ளதாக ஷேர்சாட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பேஸ்புக் , ட்விட்டர், கூகுள், ஸ்னாப் மற்றும் டைகர் குளோபல் ஆகிய சமூக வலைதளங்களில் பணிபுரிந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஷேர்சாட்டில் பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக சமூக வலைதளங்களில் பணி நீக்க நடவடிக்கை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணி நீக்கம் குறித்து ஷேர் சாட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மேலும் கூறியபோது ஷேர் சாட் பணியாளர்களை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தற்போது வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் பணி நீக்க நடவடிக்கை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். எங்கள் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் நாங்கள் திட்டமிட்டுள்ள காரணத்தினால் பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் பணியமர்த்தல் பணியும் விரைவில் நடைபெறும் என்றும் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான ஷேர் சாட்டில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர் உள்ளனர் என்பதும் உலக அளவில் இந்த சமூக வலை தளத்திற்கு பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.