உலகம்
“நான் திரும்ப வந்துவிட்டேன்”: டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பதிவு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் அடிக்கடி வித்தியாசமான விஷயங்களை பொதுவெளியில் பேசக் கூடியவர். கடந்த முறை அதிபராக இருந்த போது, இவர் பேசிய விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது எனலாம்.
டொனால்ட் ட்ரம்ப்
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். பிறகு, 2021 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார். இருப்பினும், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார்.
இதனை அவரது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாகவே ஒளிபரப்பினார். அவரது பேச்சைக் கேட்டு ஜனவரி 6 ஆம் தேதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையைத் தூண்டியதாக டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டது.
நான் திரும்ப வந்துவிட்டேன்
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்கள் நேற்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் தனது பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் ‘நான் திரும்ப வந்துவிட்டேன்’ என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். இது அவரின் ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பத