சினிமா
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!

நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது என சோனியா அகர்வால், கீதாஞ்சலி என இரண்டு திருமணங்களை செய்து விட்டு இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் மீண்டும் விவாகரத்து செய்யப் போகிறாரா என்கிற கேள்வியை அனைத்து மீடியாக்களும் கேட்கும் அளவுக்கு பூதாகரமான நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் போட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் மேலும், அந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என்கிற ட்வீட்டை போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டார் இயக்குநர் செல்வராகவன்.
இதற்கு முன்னதாக அவரே தனது தலை முடியை பிய்த்துக் கொள்ளும் போட்டோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
சுமார் ஒரு மில்லியன் பேர் பார்த்துள்ள அந்த ட்வீட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவனையும் விவாகரத்து செய்ய போறீங்களா செல்வராகவன் என்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் உங்க தம்பி தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தார். ஆண்டு இறுதியில் நீங்க அந்த முடிவை எடுத்துட்டீங்களா என கலாய்த்து வந்தனர்.
ஆனால், அது தொடர்பாக எந்த விளக்கமும் மறுப்போ இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக கீதாஞ்சலி செல்வராக்வன் பதிவிட்டுள்ள புதிய புகைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் மட்டும் மிஸ்ஸிங். தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கீதாஞ்சலி செல்வராகவன் 2022ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை….இந்த ஆண்டு வேடிக்கையுடன் அற்புதமாக முடிகிறது என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மறைமுகமாக செல்வராகவனை பிரிந்து விட்டேன் என சொல்கிறாரா? கீதாஞ்சலி என பலரும் அவரது போஸ்ட்டுக்கு கீழ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.