சினிமா
இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா செல்வராகவன்? திடீரென இந்த ட்வீட் ஏன்?
Published
1 month agoon
By
Saranya
இயக்குநர் செல்வராகவன் திடீரென பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஜீனியஸ் மறுபடியும் விவகாரத்தா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக மாறிய செல்வராகவன் அந்த படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால், அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு சமயத்தில் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலி செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட செல்வராகவனுக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், திடீரென இப்படியொரு ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் போட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என பதறிப் போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ட்விட்டரில் ஏதோ ஒரு தத்துவத்தை சொல்வது போல திடீரென ஒரு ட்வீட் போடுவார். ஆனால், தற்போது அவர், ”தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என இப்படியொரு பிரிவு தொடர்பான ட்வீட் போட்டது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022
17 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தான் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்நிலையில், செல்வராகவனும் இரண்டாவது மனைவியை பிரிகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நடிகராக மாறிய நிலையில், அடுத்து செல்வராகவன் ஜி. மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் தனுஷின் வாத்தி படம் தள்ளிப் போனது போலவே அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.
You may like
-
2வது கணவரையும் விவாகரத்து செயத அமேசான் ஜெஃப் பிஜோஸ் முதல் மனைவி: என்ன காரணம்?
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: மணமகள் திரையுலக பிரபலத்தின் மகள்!
-
24 கொலை செய்த செல்வராகவன், 25 கொலை செய்த கீர்த்தி சுரேஷ்: ‘சாணிக்காகிதம்’ டிரைலர்
-
பழி வாங்குறதுன்னா இதுதான்: கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காகிதம்’ டீசர்!
-
பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை: ரூ.350 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகை!