சினிமா செய்திகள்
தலைவர் 169’ படத்திற்கும் சஞ்சய்தத் வில்லனா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படத்தில் சஞ்சய் தத் தான் வில்லன் என்று கூறப்படும் நிலையில் தற்போது தலைவர் 169 திரைப்படத்திற்கும் அவர்தான் வில்லன் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய்தத் அடுத்ததாக தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 169 திரைப்படத்திலும் சஞ்சய் தத் தான் வில்லன் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ராய் தான் இந்த படத்தின் நாயகி என்று கூறப்படும் நிலையில் தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலம் இந்த படத்தில் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ’டாக்டர்’, டான்’ படங்களில் நடித்த பிரியங்கா மோகன், ரஜினிகாந்த் மகளாக நடிக்க இருப்பதாகவும் யோகி பாபு உள்பட நெல்சன் கூட்டாளிகள் அனைவரும் இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.








