சினிமா
சண்டை எல்லாம் இல்லைங்க.. யாரு சொன்னது.. தம்பியுடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை தம்பி தனுஷ் மற்றும் தனது குடும்பத்துடன் கொண்டாடிய அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படமும் ஒரே நாளில் போட்டியாக வெளியானது.
நானே வருவேன் படத்தின் தோல்வி காரணமாகத்தான் அண்ணன் செல்வராகவனுக்கும் தம்பி தனுஷுக்கும் இடையே சண்டை மூண்டது என சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பின.

#image_title
மேலும், நடிகர் தனுஷ் சமீபத்தில் 150 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமாக போயஸ் கார்டனில் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய போதும் செல்வராகவன் எங்கேயுமே போட்டோக்களில் தென்படாத நிலையில், இருவருக்கும் இடையே பயங்கர பகை ஓடிக் கொண்டிருப்பதாக ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில், தற்போது அனைத்துக்கும் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு தனது 46வது பிறந்தநாளை இயக்குநர் செல்வராகவன் தனது தம்பி தனுஷ் உடன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
அப்படியே அந்த புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களின் அப்டேட்களை சொல்லிடுங்க செல்வராகவன் சார் என ரசிகர்கள் அந்த கோரிக்கையையும் வைத்து வருகின்றனர்.
செல்வராகவன், தனுஷ், அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி உள்ளிட்ட பலரும் இந்த புகைப்படத்தில் உள்ளனர். கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் இன்னமும் அதே தாடி மீசை லுக்குடனே இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.