சினிமா செய்திகள்
‘அடிச்சு ஆடணும்… இல்ல அடிபட்டு சாகணும்…’- சசிகுமாரின் “ராஜவம்சம்” டிரெய்லர்!
Published
2 years agoon
By
Barath
இயக்குநரும் நடிகருமான சசிகுமார், கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு முழு வீச்சில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் வெளி வரவுள்ள திரைப்படம் தான் ‘ராஜவம்சம்’.
சசிகுமாரைத் தவிர்த்து நிக்கி கல்ரானி, யோகி பாபு, ராதா ரவி, சதீஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கெ.வி.கதிர்வேலு படத்தை இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார்.
கிராமப் பின்னணியில், குடும்ப உறவுகளின் மகத்துவத்தை சொல்லும் விதத்திலும், இயற்கையைப் பாதுகாக்கும் விதத்திலும் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சசிகுமார் திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை, கதைக் கருவாக எடுத்து உருவாக்கப்படும்.
அந்த வகையில் இந்தப் படமும் அப்படியான ஒரு சமூக மெஸேஜை சொல்லும் விதத்தில் தான் இருக்கும் என்று டிரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து கணிக்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் ஓடவில்லை.
அதே நேரத்தில் அடுத்தடுத்து அவர் கிராமப் பன்னணியில் நடித்திருக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜவம்சம், விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
You may like
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர் வெளியிட்டு விழா: சில முக்கிய தகவல்கள்