சினிமா செய்திகள்
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதும் அதை தடுக்க போலீசார் செய்யும் முயற்சிகள், அதில் ஏற்படும் இழப்புகள் ஆகியவை தான் இந்த படத்தின் கதை என்று ட்ரைலர் இருந்து தெரியவருகிறது.
அஜித் ஒற்றை ஆளாக நின்று வங்கிக்குள் புகுந்து அதகளப்படுத்தும் காட்சிகள் மங்காத்தா பாணியில் வில்லத்தனமாக பேசும் வசனங்கள் ஆகியவற்றை டிரைலரில் பார்க்கும்போது இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? என்ற வசனம் நிச்சயம் தியேட்டரில் பொறி பறக்கும் என்பது உறுதியாகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை அசத்தலாக உள்ளது என்பதும் நீரவ்ஷாவின் கேமரா புகுந்து விளையாடி உள்ளது என்பதும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.
மொத்தத்தில் அஜித், எச் வினோத் கூட்டணியில் உருவாகிய வெற்றி படம்தான் துணிவு என்பது இந்த ட்ரைலரை பார்க்கும் போது தெரிய வருகிறது.