சினிமா செய்திகள்
“சாதி நமக்கு சாமி மாதிரி”: இணையத்தை கலக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட டிரைலர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளியான மௌனகுரு, டிமான்டி காலணி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவரது நடிப்பில் கழுவேத்தி மூர்க்கன் என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
கழுவேத்தி மூர்க்கன்
ஜோதிகா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான ‘ராட்சசி’ திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சை.கௌதமராஜ். இவர் இப்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இவருக்கு நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி,க்ஷ மற்றும் முனீஸ்காந்த் உள்பட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ஹ இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில், “நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கனு நினைச்சிட்டு இருக்கீங்க” மற்றும் “சாதி, நமக்கு சாமி மாதிரி” போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கிராமத்து சாயலில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம், ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.