சினிமா செய்திகள்
சர்கார் பட ஸ்டைலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய சந்தானம்!
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு டகால்டி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது போல, இந்த படத்தின் போஸ்டரிலும் நடிகர் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார்.
காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். ஒரு சில படங்கள் சரியாக கை கொடுக்காவிட்டாலும், லேட்டஸ்ட்டாக வந்த தில்லுக்கு துட்டு 2 படம் சந்தானத்திற்கு நல்ல வசூலை ஈட்டித் தந்தது.
ஏ1, டகால்டி என தொடர்ந்து பல படங்களில் சந்தானம் நடித்து வருகிறார். விரைவில் கோலிவுட்டை தனது பக்கம் ஈர்க்க அவர் செய்யும் முயற்சிகள் நிச்சயம் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.