இந்தியா
சபரிமலை போராட்டத்தில் பரபர..பரோட்டா கடையை மூட சொன்ன பாஜகவினருக்கு கத்தி குத்து!

திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.2 2க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நேற்று போராடினார்கள்.
இந்த போராட்டத்தில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் இது தொடர்பாக 750க்கும் அதிகமானோரை இதுவரை கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்து அமைப்புகளை சேர்ந்த போராட்டக்காரர்கள் நேற்று பல இடங்களில் இயங்கி வந்த கடைகளை மூடும்படி சண்டையிட்டு இருக்கிறார்கள். கேரளாவில் நடந்த இந்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பல கடைகள் நேற்று வழக்கம் போல இயங்கி வந்தது.


















