சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ படத்தின் அசத்தலான ஸ்டில்லை வெளியிட்ட சன்பிக்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் வரை ரஜினியின் கார் சென்றது குறித்த வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இருக்கும் இந்த புகைப்படம் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் வழக்கம்போல் ரஜினிகாந்த் இளமையாகவும் ஸ்டைலாகவும் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த் ஜோடியாக மீனா, குஷ்பு நடிக்கும் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Annaatthe from the shooting spot.@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/1cb9tSCMgM
— Sun Pictures (@sunpictures) April 12, 2021






















