சினிமா செய்திகள்
இந்திய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ராஜமௌலியின் “RRR” இந்த தேதியில்தான் ரிலீஸ்!!

‘பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் எப்போது வெளியாகப் போகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, ஆர்ஆர்ஆர் வெள்ளித்திரையில் மின்ன உள்ளது.
An announcement that you all have been waiting for will be at 2 PM, Today. Stay Tuned. ????????✊????#RRRMovie #RRR@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/zDhdPtZhOy
— RRR Movie (@RRRMovie) January 25, 2021
‘நான் ஈ’, ‘மாவீரன்’, ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்தத் திரைப்படங்களை எடுத்த ராஜமௌலி உருகி உருகி எடுத்து வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மகனும் முன்னணி நடிகருமான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட்டின் முன்னணி ஹீரோ அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நட்ச்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
RAMARAJU and BHEEM… #RRRFestivalOnOct13th #RRRMovie pic.twitter.com/p6KTISIkcV
— RRR Movie (@RRRMovie) January 25, 2021
கொரோனா கட்டுப்பாடுகளுடன் தற்போது பல இடங்களில் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வரப்படும் ஆர்ஆர்ஆர், எப்படியும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். தற்போது அதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜமௌலி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் அவர்கள் ‘ஆர்ஆர்ஆர்’ போஸ்டுகள் போட்டுத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

















