சினிமா செய்திகள்
சர்ப்ரைசாக சென்று ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா!

ரசிகரின் கோரிக்கையை ஏற்று, அவரது திருமணத்திற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸாக சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடிக்க உள்ளார். சூரரைப் போற்று பெரும் வெற்றிபெற்றதை அடுத்து, சூர்யாவின் இந்தப் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வடசென்னை சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் சூர்யாவை டேக் செய்து டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தும்படியும் கூறியிருந்தார். ஆனால், அவ்வாறு ட்வீட் பதிவிட்டதோடு சரி. அதைப் பற்றி ஹரி மறந்து விட்டார்.
ஆனால், சூர்யா தனது ரசிகரின் வேண்டுகோளை ஏற்று ஹரியின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தார். சூர்யாவின் திடீர் வருகையால் திருமண மண்டபமே பெரும் பரபரப்பானது. ஹரி சூர்யாவைப் பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கினார். பின்னர், மணமகன் கோலத்தில் ஹரி இருக்க, நடிகர் சூர்யா தாலி எடுத்து அவருக்கு கொடுத்தார். அதை அப்படியே ஹரி தனது வாழ்க்கைத் துணைவருக்கு கட்டினார்.