சினிமா
தனுஷின் பாடலுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலை ஒப்பிட்ட இசையமைப்பாளர்!

தனுஷின் பாடலோடு ‘நாட்டு நாட்டு’ பாடலை இசையமைப்பாளர் கீரவாணி ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றது.

Natu Natu
இதனை அடுத்து, இந்தப் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ‘நாட்டு நாட்டு’ பாடலை அவர் நடிகர் தனுஷின் ‘கொலவெறி’ பாடலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, ‘’நாட்டு நாட்டு’ பாடல் இப்போது உலக அளவில் ரசிகர்களிடம் போய் சேர்ந்துள்ளது.
முன்பு நடிகர் தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறி?’ பாடல் எப்படி உலகம் முழுவதும் பலரிடமும் போய் சேர்ந்ததோ அதுபோலவே, இந்தப் பாடலும் வெற்றிப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. அந்தப் பாடலைப் போலவே ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான வரிகளும் அமைந்திருக்கிறது.
நடன அமைப்பாளர் சந்திர போஸின் நடன அமைப்பும் இந்தப் பாடல் வெற்றிப் பெற முக்கியக் காரணம். இந்தப் பாடல் இந்த அளவுக்கு ரசிகர்களிடம் போய் சேரும், ஆஸ்கர் வெல்லும் என்பது நாங்கள் எதிர்பார்க்காதது” என்றார்.