சினிமா செய்திகள்
ஜப்பானில் சாதனைப் படைத்த ஆர்ஆர்ஆர்: அதிக வசூல் குவித்து முதலிடம்!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான் நாட்டில் இருக்கும் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. மேலும் இத்திரைப்படம் ரூ.119 கோடியை வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம்
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலக அளவில் ஆர்ஆர்ஆர் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்த நிலையில், ஜப்பானில் மட்டுமே படம் 200 நாட்கள் ஓடி சாதனையைப் படைத்துள்ளது.
ஜப்பானில் சாதனை படைத்த RRR
ஜப்பான் நாட்டில் இருக்கும் 44 நகரங்களில் உள்ள 209 திரைகளில் ஆர்ஆர்ஆர் படம் வெளியிடப்பட்டது. இதில் 31 ஐமேக்ஸ் திரைகளும் அடங்கும். மேலும், இப்படம் ஜப்பானில் ரூ.119 கோடியை வசூலித்து அந்நாட்டில் அதிகமாக வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் தான், ஜப்பானில் அதிக வசூலை குவித்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ‘முத்து’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்து ‘ஆர்ஆர்ஆர்’ படம் அந்த இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.