ஆரோக்கியம்
கேழ்வரகு கொழுக்கட்டை ரெசிபி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்!
Published
2 மாதங்கள் agoon
By
Poovizhi
கேழ்வரகு (ராகி) உடலுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும் ஒரு ஆரோக்கியமான தானியமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் உஷ்ணத்தை குறைக்கவும், இரும்புச்சத்தை உயர்த்தவும் உதவுகிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிறந்த சிற்றுண்டியாக கேழ்வரகு கொழுக்கட்டை விளங்குகிறது.
கொழுக்கட்டை என்றாலே ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை கேழ்வரகு மாவில் செய்து கொடுத்தால் அதன் சத்துக்கள் இன்னும் அதிகரிக்கும். இப்போது சுவையான மற்றும் சத்தான கேழ்வரகு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1/2 கப்
அவல் – 1/2 கப்
நாட்டு சர்க்கரை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அவலை மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கவும்.
அதன்பின் கேழ்வரகு மாவு மற்றும் அரைத்த அவல் பொடியை சேர்த்து நன்றாக வறுக்கவும். இதில் ஏலக்காய் தூள், உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி, சப்பாத்தி மாவு போன்ற கெட்டியான பதம் வரும் வரை சமைக்கவும்.
மாவு தயார் ஆனதும் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆற விடவும்.
பின் கைகளில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை வடிவில் பிடிக்கவும்.
இறுதியாக, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு கொழுக்கட்டை தயார்! இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த பாரம்பரிய உணவாகும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

உலர் திராட்சையின் அற்புத நன்மைகள்: நோய் எதிர்ப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை முழு பலன்கள்!

குழந்தைகளுக்கு முதலில் கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான கீரை – அரை கீரையின் நன்மைகள்!

மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிடாதீர்கள்! வேக வைத்து சாப்பிட்டால் இந்த நன்மைகள் கிடைக்கும்

முருங்கைப் பூ தேநீரின் அற்புத நன்மைகள் – உடல்நலத்திற்கு ஏன் அவசியம்?

தினமும் 1 ஸ்பூன் பரங்கி விதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள்?

“குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்: நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து உடல் வெப்பத்தை உறுதி செய்யுங்கள்”!






















