சினிமா
அடுத்தச் சாதனை பியார் பிரேமா காதல் படம்!

சென்னை: பியார் பிரேமா காதல் படம் மற்றொரு சாதனை படைக்கவுள்ளது.
பியார் பிரேமா காதல் திரைக்கு வந்து சில நாட்களில் ரசிகர்கள் மத்தியில் காதல் புயலைக் கிளப்பிய படம் என்றும் கூடசொல்லலாம். இளம் இயக்குநர் இளன் இப்படத்திக் மூலம் சாதனை படைத்தார்.
பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர் ரைஸா, ஹரிஷ் கல்யாண். இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்தபடம். ஏற்கனவே யுவன் இசையில் பாடல்கள் ரசிகர்களிடம் செம்ம ஹிட்டானது.
வெளியான பின் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் அள்ளியது. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இளன் தற்போது மும்பைசென்றுள்ளாராம். மேலும் தெலுங்கிலும் இப்படம் வெளியாகவுள்ளது.











