Connect with us

சினிமா செய்திகள்

விஜய்க்கே டஃப் கொடுத்த நான் அவருக்கு அண்ணனா நடிப்பதா? பிரசாந்த் ஆவேசம்

Published

on

ஒரு காலத்தில் அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களுக்கும் டஃப் கொடுத்த நடிகராக விளங்கியவர் பிரசாந்த் என்பதும் அவர் தற்போது விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தில் இரண்டு அண்ணன் கேரக்டரில் நடிக்க மோகன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இதில் மோகன் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் பிரசாந்த் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.

விஜய் அஜித் ஆகிய இருவருக்குமே நான் ஒரு காலத்தில் டஃப் ஆக இருந்தவன் என்றும் அப்படிப்பட்ட நான் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதா? என்று ஆவேசமாக அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வரும் ‘அந்தகன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அவர் விஜய் படத்தில் அண்ணனாக நடித்தால் தனது ஹீரோ இமேஜுக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் நடிக்க மறுத்ததாகவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு அண்ணன் கேரக்டராக இருந்தாலும் பிரசாந்துக்கு மக்கள் மனதில் இடம் பெறும் ஒரு நல்ல கேரக்டர் என்றும் அந்த கேரக்டரை அவர் மிஸ் செய்துவிட்டார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 90 களில் இருந்த மற்றொரு ஹீரோ ஒருவரிடம் தற்போது ’தளபதி 66’ படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Nhựa pvc cửa.