Connect with us

சினிமா செய்திகள்

மகளை முழுமையாக நம்பிய ரஜினிகாந்த்: ‘தலைவர் 169’ உறுதியானது இப்படித்தான்!

Published

on

soundarya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ படத்தை இயக்குனர் நெல்சன் என்பதை ரஜினிகாந்த் உறுதி செய்வதற்கு அவரது இளைய மகள் சௌந்தர்யா தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. ஆனால் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சரியில்லை என்பதால் இந்த படத்தின் இயக்குனர் மாற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது .

இந்நிலையில் அனிருத் மூலம் நெல்சன் தூதுவிட்டதாகவும், இதனை அடுத்து ரஜினிகாந்த் சமாதானமடைந்து ’தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கே கொடுத்ததாகவும் கூறப்பட்டது .

ஆனால் உண்மையில் ரஜினியின் மனதை மாற்றியது சௌந்தர்யா ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது. முதலில் நெல்சனிடம் சௌந்தர்யா கதை கேட்டபோது அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கண்டிப்பாக நெல்சன் இந்த படத்தை மக்கள் விரும்பும் வகையில் தயார் என்று உருவாக்குவார் என்றும், இதனை அடுத்து ஒவ்வொரு காட்சியாக ரஜினியிடம் சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கி, இந்த காட்சிகளில் எல்லாம் கண்டிப்பாக கைதட்டல் கிடைக்கும் என்றும் நீங்கள் ஒரு முழுநீள காமெடி படத்தில் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது என்றும் எனவே இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் சௌந்தர்யா கூறியதாகவும் மகளை முழுமையாக நம்பிய ரஜினிகாந்த் இந்த படத்தை நெல்சனே இயக்கட்டும் என்று சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Discover the key differences between sun.