Connect with us

சினிமா செய்திகள்

Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் குடுத்த படக்குழு!

Published

on

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 வெளியாகவுள்ளது.

இசையமைத்து நடிப்பதுடன் சேர்த்து விஜய் ஆண்டனி இப்படத்தை இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் 2 மற்றும் பிச்சகாடு 2 என தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளில் மிகவும் மும்மரமாக  உருவாகி வருகிறது.   இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் குணமடைந்து நலமாக உள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் டிரெய்லர் பிப்ரவரி 10 அன்று வெளியாகும் என் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவு மூலம் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லர் வெளியானது. இந்த ட்ரைலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக்பீக் ட்ரைலரை வெளியிட்ட படக்குழு படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Find out what a metal shingle roof is an.