சினிமா செய்திகள்
வெளியானது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ஸ்னீப் பீக் ட்ரெய்லர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.
அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. கோடியில் ஒருவன் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 6 படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்னமும் வெளியாகாமல் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது.

#image_title
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை தானே தயாரித்து, இயக்கி நடிக்க முடிவு செய்த விஜய் ஆண்டனி விறுவிறுவென அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெய்லரயும் வெளியிட்டுள்ளார்.
படம் தொடங்கியதும் முதல் 4 நிமிடங்கள் வரும் காட்சியை வெளியிடப் போவதாக அறிவித்த விஜய் ஆண்டனி 3.5 நிமிடக் காட்சிகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

#image_title
ஆரம்பத்திலேயே பணக்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி வர, அதன் பின்னணியில் வில்லன் அந்த தற்கொலைக்கு தூண்டுதலாக இருக்கும் காட்சிகளும், அதன் பின்னர் டிவியில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் ஒருவர் பேசும் பேட்டியை வில்லன் காண்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ட்ரெய்லரில் விஜய் ஆண்டனியை பார்க்கலாம் என நினைத்த அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றாலும், கதையாக இந்த காட்சிகள் நல்லா இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், விமானம் தரையிறங்கும் அந்த கடைசி சிஜி காட்சியை தவிர்த்து இருக்கலாம் என்றும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சம்மருக்கு பிச்சைக்காரன் வெளியாகும் என இந்த ஸ்னீக் பீக் ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.